சபரிமலை ஐயப்பன் கோயிலில் தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
மண்டல, மகர விளக்கு பூஜைக்கு உடனடி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டதல், கட்டுக்கடங்காத கூட்ட நெரிசல் ஏற்பட்டதுடன், பக்தர்கள் 30 மணி நேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்ய நேர்ந்தது.
இந்த சம்பவத்திற்கு கேரளா உயர்நீதிமன்றமும் கண்டனம் தெரிவித்திருந்தது. இதுபோன்ற சம்பவங்கள் இனி நிகழாமல் தடுக்கும் வகையில், உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து செய்து, ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.