உலகப் புகழ்பெற்ற 126 -வது மலர் கண்காட்சி, வரும் 10-ம் தேதி முதல் 20 -ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ஆண்டுதோறும் மலர்க்கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம்.
அந்த வகையில், நீலகிரியில் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் இந்த ஆண்டு மலர் கண்காட்சி நடைபெற உள்ளது.
இதற்காக, தயார் செய்யப்பட்ட 388 ரகங்களில் 65 ஆயிரம் மலர் தொட்டிகளை மலர் மாடத்தில் காட்சிப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
இதில் 6 புள்ளி 5 லட்சம் மலர் நாற்றுகள் மலர்ந்து அழகாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு மலர்கண்காட்சியின் சிறப்பம்சமாக மே 10 மற்றும் 20 -ஆம் தேதிகளில், தாவரவியல் பூங்காவில் ‘லேசர் லைட் காட்சி’-க்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.