கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்து கிராம மக்கள் வினோத வழிபாடு நடத்தினர்.
அன்னூர் அருகே லக்கேபாளையம் கிராமத்தில், கடந்த 6 மாதங்களாக மழை பெய்யாததால் கடும் வறட்சி ஏற்பட்டு தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
இந்நிலையில் வறட்சி நீங்கி மழை பெய்ய வேண்டி இரண்டு கழுதைகளுக்கு திருமணம் செய்து வைக்கும் பஞ்ச கல்யாணி திருமணம் விழா நடத்த கிராம மக்கள் முடிவு எடுத்தனர்.
அதன்படி அங்குள்ள சுப்பிரமணியர் கோயிலில் மேளதாளம் முழங்க இரண்டு கழுதைகளுக்கும் திருமணம் செய்து வைத்தனர்.