அரியலூரில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த கூலித்தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
நாகபந்தல் வடக்கு தெருவை சேர்ந்த சுபாஷ் 15 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதனையடுத்து சிறுமியின் பெற்றோரை தொடர்பு கொண்டு இதுபற்றி கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த பெற்றோர் இதுகுறித்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
தகவலின்பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் சுபாஷை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர்.