நீலகிரி மாவட்டம், தொரப்பள்ளி பகுதிக்குள் உலா வரும் காட்டு யானையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
தொரப்பள்ளி பகுதியில் நெல், வாழை, இஞ்சி போன்றவற்றை விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.
இதனை ஒட்டிய வனப்பகுதிக்குள் இருந்து வந்த மக்னா என்ற காட்டுயானை, தொரப்பள்ளி பஜார் பகுதிக்குள் நுழைந்தும், சாலையோர கடைகளில் இருக்கும் பொருட்களை சேதப்படுத்தியும் வந்தது.
இந்நிலையில் இந்த காட்டு யானையை காட்டுக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதிமக்கள் கோரிக்கை வைத்தனர்.