மயிலாடுதுறை அருகே ஆலாலசுந்தரி பத்ரகாளி அம்மன் கோவிலில் காவடி மற்றும் பால்குடம் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
நீடூரில் ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சோமநாத சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.
சித்திரை பெருவிழாவை யொட்டி, ஆலாலசுந்தரி பத்ரகாளி அம்மன் பால்குடத் திருவிழா விமர்சையாக நடைபெற்றது.
விரதம் இருந்த பக்தர்கள் பத்திரகாளி அம்மன் கோவிலில் இருந்து மேளம், தாளம் முழங்க நூற்றுக்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக பால்குடம் எடுத்து வந்தனர்.
இதனைத் தொடர்ந்து பக்தர்கள் கூண்டு காவடி மற்றும் அலகு குத்தியபடி ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
அப்போது, ஒரே அழகுகை இரண்டு பக்தர்கள் குத்தியபடி நேர்த்திக்கடன் செலுத்திய காட்சி காண்போரை பரவசமடைய செய்தது.