கர்நாடகாவில் அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
மைசூர் மாவட்டம் கே.ஆர்.நகரில் 70 பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நெல் வயலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 40-க்கும் மேற்பட்டோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.