வேலூரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 30 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் 1500 லிட்டர் ஊரல்களை போலீசார் கீழே ஊற்றி அழித்தனர்.
அணைக்கட்டு அருகேயுள்ள அல்லேரி வனப்பகுதியில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் 10-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் வனப்பகுதிக்குள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது வனப்பகுதிக்குள் கள்ளச்சாராயம் காய்ச்சி வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து அங்கிருந்த 30 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் 1500 லிட்டர் ஊரல்களை போலீசார் கீழே ஊற்றி அழித்தனர்.