வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைய உள்ள இடத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
வடலூரில் உள்ள பெருவெளி என்ற இடத்தில் வள்ளலார் சர்வதேச மையம் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தன.
அப்போது அந்த பகுதியில் பழங்கால கட்டடம் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து பெருவெளி பகுதியில் தொல்லியல் ஆய்வு நடத்த வேண்டுமென உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, தொல்லியல் துறையினர் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.