ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே, சுமார் 810 கிலோ தங்க நகைகளை ஏற்றிச் சென்ற வேன் விபத்துக்குள்ளானது.
சுமார் 666 கோடி ரூபாய் மதிப்பிலான 810 கிலோ தங்க நகைகளை ஏற்றிக்கொண்டு, சரக்கு வாகனம் ஒன்று கோவையிலிருந்து சேலம் நோக்கி வந்துகொண்டிருந்தது.
சித்தோடு சமத்துவபுரம் அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த வாகனம், சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், ஓட்டுநரையும், பாதுகாவலரையும் மீட்டு பவானி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மேலும், வாகனத்தில் இருந்த தங்க நகைகளை மாற்று வாகனத்தில் சேலத்திற்கு அனுப்பி வைத்தனர்.