ராமநாதபுர மாவட்ட ஆட்சியர் பெயரில் போலியாக 38 லட்சம் ரூபாய்க்கு நிதி அனுமதி வழங்கியதாக முன்னாள் ஊராட்சி செயலாளர் மற்றும் கணக்கர் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கமுதியில் கழிப்பறை கட்டும் பணிகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியரின் ஒப்புதல் பெறாமல், முன்னாள் ஊராட்சி செயலாளர் ரகுவீர கணபதி மற்றும் முன்னாள் கணக்கர் துர்கா ஆகியோர் நிதி வழங்கியதாக கூறப்படுகிறது.
மேலும் சுமார் 38 லட்சம் ரூபாய்க்கு மாவட்ட ஆட்சியரின் அனுமதி இல்லாமல் நிதி வழங்கப்பட்டதாகவும் புகார் எழுந்தது.
இது குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில், ஊராட்சி செயலாளர் சந்தோசம் அளித்த புகாரின்பேரில், விசாரணை மேற்கொண்ட மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், ரகுவீர கணபதி மற்றும் துர்கா மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.