கன்னியாகுமரியில் உள்ள ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் சித்திரைத் விழாவையொட்டி பக்தர்கள் பொங்கலிட்டு வழிபட்டனர்.
தக்கலை அருகே அமைந்துள்ள ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.
இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 3000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு பொங்கலிட்டு வழிபட்டனர்.
ஒவ்வொரு ஆண்டு கொடை விழாவின்போதும் அம்மனுக்கு பொங்கலிட்டு நேர்த்திக்கடன் செலுத்தி வருவதாக பக்தர்கள் தெரிவித்தனர்.