மதுரையில் போலி ஆவணங்கள் மூலம் காலி மனைகளை பத்திரப்பதிவு செய்து பல கோடி ரூபாய் மோசடி செய்த கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை மீனாட்சி நகரை சேர்ந்த சிவபாதம் என்பவர் சென்னையில் பணிபுரிந்து வரும் நிலையில், அண்மையில் சொந்த ஊர் சென்றபோது அவரது 5 சென்ட் நிலம் வேறொருவருக்கு விற்பனை செய்யப்பட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.
சிவபாதம் பெயரில் இறப்பு சான்றிதழும், ஒரு பெண் பெயரில் வாரிசு சான்றிதழும் பெறப்பட்டு அந்த இடம் வேறொருவரின் பெயரில் பதிவு செய்யட்டது தெரியவந்தது.
இது தொடர்பாக மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.