தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே அஞ்சலகத்தின் பாதுகாப்புப் பெட்டகத்தை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர்.
வீரபாண்டியன்பட்டினம் கிளை அஞ்சலகத்தில் பாதுகாப்பு பெட்டகத்தை உடைப்பதற்காகச் செய்த முயற்சி தோல்வியில் முடிந்ததால், பல லட்சம் ரூபாய் பணம் கொள்ளையர்களிடமிருந்து தப்பியுள்ளது.
திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு மாதத்தில், சுமார் 75 சவரன் தங்க நகைகள், சுமார் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம், 20-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் திருடுபோயுள்ளன.
இந்த தொடர் கொள்ளை சம்பவங்களால் பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
















