மதுரையில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் தெப்பக்குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டவரின் சடலத்தை போலீசார் மீட்டனர்.
வண்டியூர் மாரியம்மன் கோயில் தெப்பகுளத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள், காவல்துறைக்கு தகவலளித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது உயிரிழந்தவர், முனிச்சாலை பகுதியை சேர்ந்த சந்திரசேகர் என்பதும், தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் தெப்பக்குளத்தில் குதித்து தற்கொலை செய்துகொண்டதும் தெரியவந்தது.