கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 82 வயது மூதாட்டி ஒருவர், பளு தூக்கும் போட்டியில் வெற்றி பெற்று அசத்தியுள்ளார்.
பொள்ளாச்சியைச் சேர்ந்த வெங்கட்ராமன் என்பவரின் மனைவி கிட்டம்மாள். இவர், தனது மகள் வீட்டிற்கு செல்லும்போது தனது பேரன்கள் உடற்பயிற்சி செய்வதை கண்டு தானும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்ற ஆசையில், பளு தூக்கும் பயிற்சி மேற்கொண்டார்.
இந்நிலையில், கோவையில் தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டி நடைபெற்றது. பெண்களுக்கான பளு தூக்கும் பிரிவில் பங்கேற்ற மூதாட்டி கிட்டம்மாள், 50 கிலோ எடையை தூக்கி முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்று, ஐந்தாம் இடத்தை பிடித்தார்.