புதுச்சேரியில், கடந்த 8 மாதங்களாக மூடப்பட்டிருந்த முத்துமாரியம்மன் கோயில் போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் திறக்கப்பட்டது.
கடந்த ஆண்டு, கோயில் நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றபோது இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.
இதையடுத்து, கோயிலும் மூடப்பட்டது. இந்நிலையில், கடந்த 8 மாதங்களாக கோயில் மூடப்பட்ட நிலையில், அப்பகுதி மக்களிடம் அதிகாரிகள் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, தாசில்தார் பிருத்வி முன்னிலையில் கோவில் திறக்கப்பட்டது.