விழுப்புரத்தில் மின்னனு வாக்குப்பதிவு அறையில் வைக்கப்பட்டிருந்த 8 சிசிடிவி கேமராக்கள் இடி தாக்கியதால் மின்பழுது ஏற்பட்டு செயல் இழந்ததாக மாவட்ட தேர்தல் அலுவலர் பழனி தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கீழ்பெரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் மூன்று அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.
இந்த அறையில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் 45 நிமிடங்கள் செயலிழந்தது. தகவல் வெளியானது.
இதனையடுத்து தேர்தல் அலுவலர் பழனி நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சிசிடிவி கேமராக்கள் மீண்டும் பழுது ஏற்படாத வண்ணம் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.