தென்னிந்தியர்கள் குறித்து சாம் பிட்ரோடா சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த நிலையில், இதற்காக பொதுமக்களிடம் காங்கிரஸ் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டுமென உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் 1947 பிரிவினைக்கு காரணமான காங்கிரஸ், தற்போது மதம், மொழி, இனத்தின் அடிப்படையில் பிரிவினையை விதைப்பதாக குற்றம்சாட்டினார்.
காங்கிரஸ் அயலக அணி பிரிவின் தலைவராக செயல்பட்டுவந்த சாம் பிட்ரோடா, இந்திய மக்கள் குறித்து நிறத்தின் அடிப்படையில் தெரிவித்த சர்ச்சைக் கருத்துக்கு, பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டங்கள் எழுந்தன. இதனையடுத்து அவர் தனது காங்கிரஸ் அயலக அணி பிரிவின் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது