நெல்லை மாவட்டம், நாங்குநேரி பகுதியில் சக மாணவர்களால் தாக்கப்பட்ட மாணவன் சின்னத்துரை +2 தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கு நடிகர் தாடி பாலாஜி நேரில் சந்தித்து வாழ்த்தினார்.
நாங்குநேரி பகுதியில் சாதிய வன்முறைக்காரணமாக மாணவன் சின்னத்துரை என்பவர் சக மாணவர்களால் தாக்கப்பட்டார்.
இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில் மாணவன் சின்னத்துரை +2 பொதுத்தேர்வில் 469 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.
இந்நிலையில் நடிகர் தாடி பாலாஜி மாணவன் சின்னதுரையை நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தார்.
மேலும் புதிய ஆடைகள் வாங்கி கொடுத்து உதவிகளுக்கு என்னை அழைக்கலாம் என நடிகர் தாடி பாலாஜி தெரிவித்தார்.