சிவகாசி அடுத்த செங்கமலப்பட்டியில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் நிகழ்ந்த வெடி விபத்தில், பலி எண்ணிகை 8 -ஆக அதிகரித்துள்ளது.
சிவகாசி அடுத்த செங்கமலப்பட்டியில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் பலர் பணியாற்றி வந்த நிலையில், யாரும் எதிர்பாராதவிதமாக, பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள், காயமடைந்தவர்களை மீட்டு, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர்.
இந்த நிலையில், வெடிவிபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 8-ஆக உயர்ந்துள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது.