நடிகர் சல்மான் கான் வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்திய வழக்கில் கைதான ரஃபிக் சவுத்ரி, மேலும் இரண்டு நடிகர்களின் வீடுகளையும் நோட்டமிட்டது தெரியவந்துள்ளது.
நடிகர் சல்மான் கானின் அடுக்குமாடி குடியிருப்புக்கு வெளியே துப்பாக்கிச்சூடு நடத்திய வழக்கில், ராஜஸ்தானில் பதுங்கியிருந்த ரபீக் சவுத்ரி என்பவரை ஐந்தாவது நபராக போலீசார் கைது செய்தனர்.
அவரிடத்தில் நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த ஏப்ரல் 12-ம் தேதி சல்மான் கானின் அடுக்கு மாடி கட்டடத்தை நோட்டமிட்டு வீடியோ எடுத்தது தெரியவந்தது.
அதுமட்டுமின்றி ரஃபிக் சவுத்ரி, மேலும் இரு நடிகர்களின் வீடுகளையும் நோட்டமிட்டதாக மும்பை குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.