காங்கிரஸ் அயலக பிரிவு தலைவராக பொறுப்பு வகித்த சாம் பிட்ரோடா தெரிவித்த நிற ரீதியான கருத்துக்கு ஆதரவாக, காங்கிரஸ் எம்.பி. அதிர் ரஞ்சன் செளத்ரி முன்வைத்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், மக்களை அவமதிப்பதே காங்கிரசின் வாடிக்கையாகிவிட்டது என்று குற்றம்சாட்டினார்.
மேலும் மக்களை நிறத்தின் அடிப்படையில் எதிர்க்கட்சிகள் வேற்றுமைப்படு்த்துவதாகவும், காங்கிரசுடன் கூட்டணியில் திமுக நீடிப்பது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.