புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே தெரு நாய் கடித்ததால் 12 பேர் காயமடந்தனர்.
சொக்கநாதபட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சொக்கநாதப்பட்டி கிராமத்தில் சாலையில் நடந்து சென்ற பொதுமக்களை தெரு நாய் ஒன்று துரத்தி சென்று கடித்துள்ளது.
இதில் முன்னாள் கிராம நிர்வாக அலுவலர், பெண்கள், குழந்தைகள் என12 பேர் காயமடைந்தனர்.
இதையடுத்து காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் சாலையில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.