நீலகிரி மாவட்டம், உதகையில் 126-வது மலர் கண்காட்சியை தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா தொடங்கி வைத்தார்.
உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 126-வது மலர் கண்காட்சி மற்றும் 19-வது ரோஜா கண்காட்சி 10 நாட்கள் நடைபெறுகிறது.
இதற்காக மலர்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்ட பிரமாண்ட நுழைவு வாயில்கள், 30 அடி உயரத்தில் பிரமாண்ட டிஸ்னி வேர்ல்ட், செல்ஃபி ஸ்பாட் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன.
சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமாக 282 ரகங்களில் பூத்துக் குலுங்கும் வண்ண மலர்கள், 65 ஆயிரம் மலர் தொட்டிகளில் மாடத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
மலர் கண்காட்சியின் முதல் மற்றும் இறுதி நாளில் பிரமாண்டமான இரவு நேர LASER LIGHT SHOW நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா உள்ளிட்டோர் மலர் கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டனர்.
அப்போது பூத்துக் குலுங்கும் வண்ண மலர்களைக் கண்டுகளிக்க ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் குவிந்தனர்.