ஈரோடு அருகே பண்ணாரி அம்மன் கோயில் உண்டியல் காணிக்கையாக சுமார் 99 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
உலகப் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம்.
இங்கு கடந்த மாதம் பெறப்பட்ட உண்டியல் காணிக்கை எண்ணும் பணி, கோயில் செயல் அலுவலர் மேனகா முன்னிலையில் நடைபெற்றது.
98 லட்சத்து 44 ஆயிரத்து 875 ரூபாய் ரொக்கம், 448 கிராம் தங்கம், 625 கிராம் வெள்ளி காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியுள்ளனர்.