அமலாக்கத்துறையின் கடும் எதிர்ப்புக்கு இடையே, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது.
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த மார்ச் 21 -ஆம் தேதி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
“மக்களவைத் தேர்தலையொட்டி, தனக்கு இடைக்கால ஜாமீன் வழங்கவேண்டும்” என, உச்ச நீதிமன்றத்தில், அவர் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபங்கர் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்நிலையில், “அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 21-ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கப்படுகிறது” எனவும், அதேவேளையில், ” ஜூன் 22-ம் தேதி மீண்டும் சரண் அடைய வேண்டும்” என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த வழக்கில், மணீஷ் சிசோடியா மற்றும் முன்னாள் தெலுங்கா முதல்வர் சந்திர சேகர் ராவின் மகள் கவிதா உள்ளிட்ட 15 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.