ஈரோடு மாவட்டம், கடம்பூர் மலைப்பகுதியில் உடல் நலம் பாதிக்கப்பட்ட பெண்யானையின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட கச்சபள்ளம் வனப்பகுதியில், வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
அப்போது ஒரு பெண் யானை உடல் சோர்வுடன் காணப்பட்டது. இதைக்கண்ட அதிகாரிகள் பெண் யானைக்கு தீவிர சிகிச்சை அளித்தனர்.
இருப்பினும் யானையின் உடல் நிலையில் முன்னேற்றம் இல்லை எனவும் மருந்துகள், குளுக்கோஸ் செலுத்தியும் யானையின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது எனவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.