அட்சய திருதியையை முன்னிட்டு, ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் மூன்றாவது முறையாக உயர்ந்து சவரனுக்கு ஆயிரத்து 240 ரூபாய் உயர்ந்துள்ளது.
சித்திரை மாதத்தின் அமாவாசைக்குப் பிறகு வரும் வளர்பிறை திருதியை, அட்சய திருதியையாக கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான அட்சய திருதியை அதிகாலை 4.17 மணிக்கு தொடங்கி நாளை மதியம் 2.50 மணிக்கு முடிவடைகிறது.
இந்த நாளில் தங்கம் வாங்கினால், செல்வம் பெருகும் என்ற நம்பிக்கை பொதுமக்களிடம் உள்ளது.
அட்சய திருதியையொட்டி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ஆயிரத்து 240 ரூபாய் உயர்ந்து 54 ஆயிரத்து 160 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
அட்சய திருதியை தினத்தை ஒட்டி, அதிகாலையிலேயே நகைக்கடைகளில் பொதுமக்கள் குவிந்துள்ளனர்.