சந்தேஷ்காளி விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்துவதில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு என்ன பிரச்சினை என அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா கேள்வி எழுப்பியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் சந்தேஷ்காளியில் திரிணமூல் காங்கிரஸ் நிர்வாகி மீது நில அபகரிப்பு மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்ததால், இது குறித்து சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில், பாரக்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா,
சந்தேஷ்காளி விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்துவதில் மம்தாவுக்கு என்ன பிரச்சினை உள்ளது என கேள்வி எழுப்பியதுடன், சிபிஐ விசாரணைக்கு மம்தா பானர்ஜி முட்டுக்கட்டை போடுவதாகவும் குற்றம்சாட்டினார்.