4-ம் கட்ட மக்களவை தேர்தலை முன்னிட்டு ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட 10 மாநிலங்களில் இன்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்கிறது.
நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில், 4-ம் கட்டத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா, மேற்கு வங்கம் உள்பட 10 மாநிலங்களில் உள்ள 96 தொகுதிகளுக்கு நாளை மறுதினம் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
இதில், ஆந்திராவில் உள்ள 25 தொகுதிகளுக்கும், தெலங்கானாவில் உள்ள 17 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
மேலும், ஆந்திரா மற்றும் ஒடிசாவில் நாடாளுமன்றத் தேர்தலோடு இணைந்து சட்டமன்றத் தேர்தலும் நடைபெறவுள்ளது.
4-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு, இந்த 10 மாநிலங்களிலும் அரசியல் தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர்.
இன்று மாலை 6 மணியுடன் 96 தொகுதிகளிலும் பிரச்சாரம் ஓய்கிறது.