திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா சுவாமி தரிசனம் செய்தார்.நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது.
3 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட 10 மாநிலங்களில் உள்ள 96 தொகுதிகளுக்கு வரும் 13-ஆம் தேதி, 4-ஆம் கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
இதற்கான பிரச்சாரம் இன்று மாலை ஓய்கிறது. இந்நிலையில், பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.