மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதன்படி முதல்கட்ட வாக்குப்பதிவு தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 19-ம்தேதி நடைபெற்றது.
2-ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 26-ம்தேதி 88 தொகுதிகளுக்கு நடைபெற்றது. இதில், 66 புள்ளி 71 சதவீத வாக்குகள் பதிவானது.
இதனையடுத்து 3-ம் கட்ட தேர்தல் 93 தொகுதிகளுக்கு மே 7-ம் தேதி நடைபெற்றது. அதில், 65 புள்ளி 68 சதவீத வாக்குகள் பதிவாகின.
இந்நிலையில் ஆந்திரா, தெலங்கானா, இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 96 தொகுதிகளுக்கு 4-ஆம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஆந்திர சட்டப்பேரவை தேர்தல் மற்றும் ஒடிசா சட்டப்பேரவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
96 தொகுதிகளில் மொத்தம் ஆயிரத்து 717 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
1 லட்சத்து 92 ஆயிரம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் பணிகளில் 19 லட்த்திற்கும் அதிகமான தேர்தல் அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.
வாக்குப்பதிவு முன்னிட்டு சுமார் ஒரு லட்சம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.