நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார். அவரது சொந்த ஊரான சித்தமல்லியில், நாளை காலை இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினரும், நாகை நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராஜ், சிறுநீரக தொற்றால் பாதிக்கப்பட்டார்.
சென்னை ராமாபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி அதிகாலை உயிரிழந்தார்.
67 வயதான செல்வராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். நாகை நாடாளுமன்ற உறுப்பினராக 4 முறை தேர்வாகியுள்ளார்.
செல்வராஜின் உடல் திருவாரூர் மாவட்டத்திலுள்ள சித்தமல்லி கிராமத்திற்கு இறுதிச் சடங்கிற்காகக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. நாளை காலை அவரது உடல் அடக்கம் செய்யப்படும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.