இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது.
சுமத்ரா தீவு உள்ளிட்ட பகுதிகளில் கன மழை வெளுத்து வாங்கி வருகிறது. இடைவிடாது பெய்து வரும் இந்த கனமழை காரணமாக ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியும், நிலச்சரிவு ஏற்பட்டும் மக்கள் பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில் அகம், தனாஹ் தாதர் பகுதிகளில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஏராளமானோர் சிக்கிய நிலையில் இதுவரை 37 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் மண்ணில் புதைந்தவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக மீட்புப்படையினர் தெரிவித்துள்ளனர்.