ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் வைகாசி விசாக விழாவுக்கான கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனையொட்டி கணபதி பூஜை, வாஸ்த்து சாந்தி, உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது. அப்போது சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அலங்காரத்துடன் அர்ச்சனை நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.