மின் இணைப்பில் அதிக கட்டணம் கணக்கிடப்படுவதாக புகார் எழுந்துள்ளதையடுத்து, மென்பொருளை மாற்றியமைக்க தமிழ்நாடு மின்சார வாரியம் முடிவு செய்துள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியம் அதிக உயரம் கொண்ட மின் வயர்கள் மூலமாகவும், பூமிக்கு அடியில் புதைக்கப்பட்ட புதைவடங்கள் மூலமாகவும், நுகர்வோருக்கு மின் விநியோகம் செய்து வருகிறது.
இதில் அதிக உயரத்தில் மின் வயர்கள் மூலம் கொடுக்கப்படும் புதிய மின் இணைப்புக்கு, மும்முனை இணைப்புக்கு 2 ஆயிரம் ரூபாயும், ஒருமுனை இணைப்புக்கு 2 ஆயிரத்து 800 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
இதில், உயர்த்தப்பட்ட வயர்கள் மூலம் மின்சாரம் வினியோகம் செய்யப்படும் பகுதிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக மின்சார வாரியத்திற்கு பல புகார்கள் வந்துள்ளன.
இதனைத் தொடர்ந்து, கட்டண அமைப்பின் மென்பொருளை மாற்றியமைக்க தமிழ்நாடு மின்சார வாரியம் முடிவு செய்துள்ளது.
இதன் மூலம், அதிகமாக வசூலிக்கப்பட்டு வந்த மேம்பாட்டு கட்டணம், சரி செய்யப்படும் என மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.