வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே அமைந்துள்ள கெங்கையம்மன் கோயிலில் சிரசு விழா கோலாகலமாக நடைபெற்றது.
கவுண்டன்யா மகாநதி கரையில் உள்ள இக்கோயிலில் ஆண்டுதோறும் சிரசு திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் அம்மனுக்கு காலை முதலே சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதையடுத்து சிலம்பாட்டம், மயிலாட்டம், புலியாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் அம்மன் சிரசு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.
பின்னர் ஆலய மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த சண்டாளச்சி உடலில் சிரசு பொருத்தப்பட்டது. இந்த நிகழ்வைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர்.