தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் தொடர்ந்து 2ஆவது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக அருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவிக்கு செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. நீர்வரத்து சீராகும் வரை இந்த தடை தொடரும் என வனத்துறை அறிவித்துள்ளது
















