புதுக்கோட்டை மாவட்டம் கதிராமங்கலம் ஊராட்சியில் தொடர்ந்து பத்து நாட்களாக மின்சாரம் இல்லாததால் கிராம மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.
ஆவுடையார் கோவில் கிராமத்திற்கு மின் இணைப்பு வழங்க இப்பகுதியில் மின்மாற்றி அமைக்கப்பட்டிருந்தது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மின்மாற்றி பழுதானதால் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அதனை சீரமைக்க மின்வாரிய அதிகாரி பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்பதாக கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் மின்மாற்றியை சீரமைத்து மின் விநியோகத்தை சரிசெய்யவும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.