விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே பெய்த கனமழை காரணமாக அய்யானார் கோயில் ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.
ராஜபாளையம் அருகேயுள்ள அய்யனார் கோயில், பிறாவடியார் உள்ளிட்ட பகுதிகளில் இடைவிடாது கன மழை பெய்தது. இதன் காரணமாக நீராவி அருவி மற்றும் அய்யனார் கோவில் ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.
இதன் மூலம் விவசாயங்களுக்கு அதிக அளவு நீர் கிடைக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
















