மலேசியாவில் நடைபெற உள்ள சர்வதேச சிலம்ப போட்டிக்கு தகுதிபெற்ற தூத்துக்குடி மாணவிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
கோவில்பட்டி வீரவாஞ்சி பகுதியைச் சேர்ந்த சேர்ந்தவர் பிரபாகர், இவருடைய மகள் ரொவினா கொச்சியில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் கலந்துகொண்டு தங்கம் வென்றார். இதனையடுத்து சர்வதேச சிலம்ப போட்டிக்கு அவர் தகுதி பெற்றுள்ளார். இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய ரொவினா தங்களை போன்று வீரர்களுக்கு அரசு நிதியுதவி வழங்கு வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.