திமுக அரசு தமிழகத்தில் கல்வியை கருணாநிதி மயமாக்கி வருவதாக தெலங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக காட்பாடி வந்தடைந்த தமிழிசை சவுந்தரராஜன், ரயில் நிலையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அப்போது அவர், திமுக ஆட்சி தான் காமராஜர் ஆட்சி என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியிருப்பது அதிர்ச்சியளிப்பதாகக் கூறினார்.
தலைவர்களைப் பற்றி புத்தகங்களில் இடம் பெறும் பாடங்களுக்கு வழிகாட்டு முறை இருக்க வேண்டுமெனவும், குழந்தைகள் மனதில் நல்ல விதைகளை விதைக்க வேண்டுமெனவும் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். திமுக அரசு தமிழகத்தில் கல்வியை கருணாநிதி மயமாக்கி வருவதாக தமிழிசை சவுந்தரராஜன் குற்றம் சாட்டினார்.