தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே கனிம வளங்கள் ஏற்றிச்சென்ற லாரியை சிறைபிடித்த பொதுமக்களுக்கு திமுக நிர்வாகி கொலை மிரட்டல் விடுத்த வீடியோ வைரலாகி வருகிறது.
தீர்த்தாரப்பபுரம் கிராமத்தில் நியாஸ் என்பவருக்கு சொந்தமான தனியார் கல்குவாரி இயங்கி வருகிறது.
இங்கிருந்து கனிம வளங்களை ஏற்றிக்கொண்ட லாரிகள் வெளியூர்களுக்கு செல்வதற்காக நாளாங்கட்டளை பகுதிக்குள் வந்தது, அப்போது கனரக லாரிகளை பொதுமக்கள் சிறை பிடித்தனர்.
சம்பவ இடத்திற்கு அடியாட்களுடன் வந்த திமுக நிர்வாகி, பொதுமக்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அங்கு சென்ற போலீசார், காரையும் லாரிகளையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.