சென்னை அடுத்த மணலியில் தொழிலதிபர் நிலத்தில் இருந்த சிசிடிவி கேமாராக்களை கல்லை கொண்டு உடைக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளது.
சென்னை அண்ணா நகரில் வசித்து வரும் தொழிலதிபர் ரிஷிக்குமார் என்பவர் மணலி புதுநகர் பகுதியில் கடந்த 2019ஆம் ஆண்டு நிலம் வாங்கியுள்ளார்.
இந்த நிலத்தை, அதே பகுதியை சேர்ந்த ஷகிலா என்பவர் உரிமை கோரியதாக தெரிகிறது. இந்நிலையில், அடியாட்களுடன் வந்த ஷகிலா, தொழிலதிபர் ரிஷிக்குமார் வாங்கிய நிலத்தில் இருந்த சிசிடிவி கேமராக்களை அடித்து உடைத்ததுடன், காவலாளியின் செல்போனையும் பறித்துள்ளார். இது தொடர்பாக தொழிலதிபர் ரிஷிக்குமார் மணலி புதுநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.