டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் துணை குற்றப் பத்திரிகையை விசாரணை நீதிமன்றத்தில் அமலாக்கத் துறையினர் தாக்கல் செய்துள்ளனர்.
இந்த வழக்கில் அமலாக்கத் துறை தாக்கல் செய்த 8-ஆவது குற்றப் பத்திரிகை இதுவாகும். இந்தத் துணை குற்றப் பத்திரிகையில் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் பெயர் இணைக்கப்பட்டிருப்பதாகவும், முதல்வர் கெஜ்ரிவால் பெயரில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருப்பது, இதுவே முதல்முறை என்றும் அமலாக்கத் துறையினர் தெரிவித்துள்ளனர்.