திமுக என்பது ஒரு குடும்பத்துக்கு சேவை செய்யும் கட்சியாக உள்ளது என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா விமர்சித்துள்ளார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தமது மனைவியுடன் சுவாமி தரிசனம் செய்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், வயநாட்டில் தேர்தல் முடிந்த பிறகு ஏற்பட்ட தோல்வி பயம் காரணமாகவே ராகுல்காந்தி ரேபரேலி தொகுதியில் போட்டியிடுகிறார் எனக் கூறினார்.
முதல்வர் ஸ்டாலின் தம்கீழுள்ள காவல்துறையை துஷ்பிரயோகம் செய்கிறார் எனவும் அவர் குற்றம் சாட்டினார். மேலும் பேசிய அவர், மூன்றாவது முறையாக மோடி பிரதமராக தேவையான பெரும்பான்மை கிடைத்து விட்டது என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.