மக்களவைத் தேர்தலில் பதிவாகும் வாக்குப் பதிவு விவரங்களை 48 மணி நேரத்தில் இணையதள பக்கத்தில் வெளியிட முடியாதா என தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு விவரத்தை வெளியிடுவதில் காலதாமதம் ஏற்படுவதாக உச்சநீதிமன்றத்தில் தொடந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், வாக்குப் பதிவு விவரங்களை உடனடியாக வெளியிடுவதில் தேர்தல் ஆணையத்துக்கு என்ன சிக்கல் இருக்கிறது என கேள்வி எழுப்பினர்.
ஏராளமான தகவல்களை சேகரிக்கவுள்ளதால், தாமதம் நிலவுவதாக தேர்தல் ஆணைய தரப்பு வழக்கறிஞர் வாதிட்டதை அடுத்து, இந்த விவகாரத்தில் ஒருவாரத்தில் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு, அடுத்தக்கட்ட விசாரணையை மே 24-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.