2023-ம் ஆண்டிற்கான குடிமைப்பணி தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்களுடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடினார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இந்திய குடிமைப்பணி மற்றும் இந்திய வனப்பணி ஆகிய தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டி அவர்களுடன் உரையாடல் நிகழ்த்தினார்.
அப்போது பேசிய அவர்,
தேசத்திற்கான சேவையில் முழுமையான நேர்மையை நிலைநிறுத்துமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும் அறிவுசார் மற்றும் ஆன்மீக அம்சங்களை நன்கு கவனித்து சமுதாயத்தின் அனைத்து பிரிவினருடன் நல்லிணக்கத்தை மேம்படுத்தவும், உலகில் வேகமடைந்து வரும் தேவைகளையும், சவால்களையும் சந்திக்க பல புதிய விஷயங்களை கற்றுக்கொள்ளுமாறு மாணவர்களிடம் ஆளுநர் கேட்டுக்கொண்டார்.