ஏ.ஐ என்றழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவு அறிவியலை பயன்படுத்துவோர் எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாக கூகுள் நிறுவன சிஇஓ சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
கூகுளின் வருடாந்திர வட்டமேசை கூட்டத்தில் பேசிய அவர், இந்தியா உள்ளிட்ட பிற வளர்ந்து வரும் நாடுகளுக்கு, தொழில்நுட்ப மாற்றங்கள் முன்னேறுவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் உள்ளதாகவும் கூறினார்.